மணலூர் மகாமாரியம்மன் கோவில் தேரோட்டம்

மணலூர் மகாமாரியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்தனர்.;

Update: 2022-04-25 19:32 GMT
அய்யம்பேட்டை:
மணலூர் மகாமாரியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்தனர். 
மகாமாரியம்மன் கோவில் 
அய்யம்பேட்டை அருகே மணலூர் மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் பிரம்மோற்சவ விழா கடந்த 8-ந்தேதி அய்யனாருக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவு அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது. நேற்றுமுன்தினம் காலை அம்பாள் குதிரை வாகனத்திலும், இரவு புஷ்ப பல்லக்கிலும் வீதி உலா நடைபெற்றது. 
தேரோட்டம் 
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் மகாமாரியம்மன் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து மாலை செடில் திருவிழா நடைபெற்றது. இதில் பாபநாசம் தாசில்தார் மதுசூதனன், வருவாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய கவுன்சிலர் ஜீவிதா ராஜசேகர், ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் ஹரிஷ் குமார், ஆய்வாளர் குணசுந்தரி, கணக்கர் முருகுபாண்டியன் மற்றும் கிராம நாட்டாண்மைகள், கிராமமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்