பருத்தி விவசாயிகள் மகிழ்ச்சி

மழையால் நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பதால் பருத்தி விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Update: 2022-04-25 19:30 GMT
வத்திராயிருப்பு,
மழையால் நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பதால் பருத்தி விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். 
பருத்தி சாகுபடி 
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சுந்தரபாண்டியம், கோட்டையூர், இலந்தைகுளம், தம்பிபட்டி, வத்திராயிருப்பு, சேஷபுரம், வ.மீனாட்சிபுரம், மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.  தற்போது கிணறுகளில் தண்ணீர் போதிய அளவு இருப்பதால் விவசாயிகள் பருத்தி செடியில் களை மற்றும் உரமிடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- வத்திராயிருப்பு பகுதியில் தொடர்ச்சியாக பெய்த மழையின் காரணமாக கண்மாய்கள், நீர்நிலைகள், கிணறுகளில் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் இருப்பதால் கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தொடர்ச்சியாக பருத்தி சாகுபடி செய்து விவசாய பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
விவசாயிகள் மகிழ்ச்சி 
தற்போது பருத்தியில் களை மற்றும் உரமிடும் பணியை மேற்கொண்டு வருகிறோம். இந்த ஆண்டு போதிய மகசூல் பெற்று அதிக வருவாய் பருத்தியில் கிடைக்கும் என எதிர்பார்த்து மகிழ்ச்சியுடன் விவசாய பணியை செய்து வருகிறோம்.  தற்போது வத்திராயிருப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
இவ்வாறு அவர்கள் கூறினர். 

மேலும் செய்திகள்