மாற்றுரைவரதீஸ்வரர் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம்

மாற்றுரைவரதீஸ்வரர் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம்

Update: 2022-04-25 19:30 GMT
கொள்ளிடம்டோல்கேட், ஏப்.26-
மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி கிராமத்தில் உள்ள பாலாம்பிகா சமேத மாற்றுரைவரதீஸ்வரர் கோவிலில் கடந்த 33 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய தேர் கட்டும் பணி தொடங்கி முடிவடைந்தது. இதனைத்தொடர்ந்து நேற்று திருத்தேர் வெள்ளோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் நூதன ரதத்தில் கடம் வைத்து (வெள்ளோட்டம்) திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மிகுந்த உற்சாகத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மேலும் செய்திகள்