அரசு பள்ளியை பொதுமக்கள் முற்றுகை
அரசு பள்ளியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
வடகாடு:
வடகாடு அருகே கருக்காகுறிச்சி தெற்கு தெருவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்தபள்ளியில் நடந்த பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உதவி தலைவர் நியமனம் செய்தது தங்களுக்கு தெரியப்படுத்தவில்லை என்று கூறி பொதுமக்களில் ஒரு தரப்பினர் பள்ளியை முற்றுகையிட்டனர். மேலும் தங்களுக்கு தெரியாமல் எப்படி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உதவி தலைவரை தேர்ந்து எடுக்கலாம் என்று கூறி அப்பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஒருசில மாணவர்களின் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் பள்ளி சான்றிதழை கேட்டு தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரில் வடகாடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.