தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை சாவு

ராஜபாளையம் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை இறந்தது.

Update: 2022-04-25 19:10 GMT
ராஜபாளையம்,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட தாட்கோ காலனியை சேர்ந்தவர் மரியஜான். இவருடைய மனைவி கிரிஜா. இவர்களுக்கு மரியபுதன் (வயது4), பெல்ஸ்டி (2½) என்ற 2 ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
இதில் 2-வது ஆண் குழந்தை பெல்ஸ்டி, வீட்டில் இருந்த மாதுளம் பழத்தை எடுத்து விளையாடியதாகவும், அப்போது அந்த பழம் கைத்தவறி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதை எடுக்க முயன்ற அந்த குழந்தை 5 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டிக்குள் விழுந்தது.
இதற்கிடையே தாயார் கிரிஜா, பெல்ஸ்டியை தேடினார். அப்போது தண்ணீர் தொட்டி மூடி திறந்து கிடந்ததை கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே இறங்கி தேடிய போது குழந்தை மீட்கப்பட்டு,, ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை டாக்டர்கள் பரிசோதித்த போது, ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இந்த விபரீத சம்பவம் குறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்