மின்னல் தாக்கி 19 ஆடுகள் பலி

சாத்தூர் அருகே மின்னல் தாக்கி 19 ஆடுகள் பலியானது.

Update: 2022-04-25 19:07 GMT
சாத்தூர், 
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே போத்திரெட்டிபட்டி, இருக்கன்குடி, நென்மேனி, வன்னிமடை, எம்.நாகலாபுரம், முடித்தலை ஆகிய பகுதிகளில் நேற்று காலை முதல் வெயில் சுட்டெரித்தது. இந்தநிலையில் மதியத்துக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 
பின்னர் திடீரென பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. போத்திரெட்டிபட்டி காட்டுப்பகுதியில் பலத்த மின்னல் தாக்கியதில், ஆங்காங்கே ஆடுகள் இறந்து கிடந்தன.போலீசார் விசாரித்ததில், அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரனுக்கு சொந்தமான 5 ஆடுகள், கருப்பசாமிக்கு சொந்தமான 8 ஆடுகள், ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான 5 ஆடுகள் உள்பட மொத்தம் 19 ஆடுகள் மின்னல் தாக்கியதில் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்