சூளகிரி அருகே கார் மோதி விவசாயி சாவு 2 பேர் படுகாயம்

Update: 2022-04-25 19:05 GMT
 சூளகிரி:
சூளகிரி அருகே சாலையில் நடந்்து சென்றவர்கள் மீது கார் மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
கார் மோதியது
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள கானலட்டியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 24). விவசாயி. சின்னாறு பகுதியை சேர்ந்தவர்கள் சுதர்சன் (21), கந்தன் (27). இவர்கள் 3 பேரும் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அட்டகுறுக்கி அருகே சாலையோரம் நடந்து சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த ஒரு கார் இவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் அவர்கள் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரவிச்சந்திரன் பரிதாபமாக இறந்தார்.
 சூளகிரி, ஏப்.26-

போலீசார் விசாரணை
விபத்தில் படுகாயம் அடைந்த சுதர்சன், கந்தன் ஆகிய 2 பேரும் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்