கிருஷ்ணகிரியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம்: விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வழங்கினார்

கிருஷ்ணகிரியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம்: விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வழங்கினார்

Update: 2022-04-25 19:05 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி சான்றிதழ் வழங்கினார்.
குறை தீர்க்கும் கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் நேற்று நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் பாக்கியலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் அமீர்பாஷா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் உதவித்தொகை, தையல் எந்திரம், சலவை பெட்டி, மின் இணைப்பு, சாலை வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனுக்கள் கொடுத்தனர். மொத்தம் 226 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் அதன் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 
சான்றிதழ்கள்
தொடர்ந்து பள்ளி கல்வித்துறை சார்பில் போதை பொருள் பயன்பாட்டை தடுப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஓவிய போட்டி, விழிப்புணர்வு வாசகங்கள் எழுதும் போட்டிகள் நடந்தது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற 7 மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கினார்.

மேலும் செய்திகள்