திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த 14 வயது மாணவி மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் இருப்பதை அறிந்த போலீசார் அங்கு சென்று மாணவியை மீட்டனர். மேலும் புலன்விசாரணை செய்ததில் பவானிசாகர் இலங்கை அகதி முகாமை சேர்ந்த ரகுந்தன் (வயது30) என்பவர் மாணவியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த தாக கூறப்படுகிறது.
இதனையடுத்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு வழக்கு மாற்றப் பட்டது. போலீ சார் போக்சோ சட்டத்தின்கீழ் ரகுந்தனை கைது செய்து மேல் விசாரணை செய்துவருகின்றனர்.