கல்லூரி மாணவிகளுக்கு கல்வெட்டு பயிற்சி
கல்லூரி மாணவிகளுக்கு கல்வெட்டு பயிற்சி
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகம் சார்பில் கல்லூரி மாணவியருக்கு தமிழி கல்வெட்டுகளை படிக்கும் பயிற்சி நடைபெற்றது.ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகம் சார்பில் ஆன்லைன் மூலம் உலகின் மிகப் பழமையான தமிழி கல்வெட்டு எழுத்துகளை படிக்கும் 5 நாட்கள் பயிற்சி நடைபெற்றது. முதலில் கல்வெட்டு எழுத்துகளை எழுதவும், வாசிக்கவும் பயிற்சி கொடுக்கப்பட்டது. பின்பு மதுரை யானைமலை, விக்கிரமங்கலம், அழகர்மலை உள்ளிட்ட மலைக்குகைகள், பானை ஓடுகள், காசுகள், முத்திரைகளில் உள்ள தமிழி எழுத்துகளின் படங்கள் மூலம் இந்த எழுத்துகளை எழுதவும், படிக்கவும் கற்றுக் கொடுக்கப்பட்டது.
மதுரை சேர்மத்தாய் வாசன், பரமக்குடி அரசு கல்லூரிகளைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர்கள், மாணவிகள் 55 பேர் இப்பயிற்சியில் கலந்து கொண்டு கல்வெட்டுகளை எழுதவும், படிக்கவும் பயிற்சி பெற்றனர். பயிற்சியை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு நடத்தினார்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவகுமார் செய்திருந்தார். பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு அரசு அருங்காட்சியகத்தின் சார்பில் சான்றிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.