28 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; வாலிபர் கைது

சூட்கேசில் கடத்திய 28 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-04-25 18:54 GMT
தொண்டி
சூட்கேசில் கடத்திய 28 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
புகையிலை பொருட்கள்
தொண்டியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் கடைகளுக்கு விற்பனை செய்யக்கூடிய நபரை கண்காணித்து வந்தனர். நேற்று காலை தொண்டி ஓடாவி தெரு பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடைகளுக்கு ஒருவர் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 
அதன்பேரில் தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கையில் சூட்கேசுடன் சென்று கொண்டிருந்த நபரிடம் விசாரணை நடத்தினர். மேலும் சூட்கேசை சோதனையிட்டபோது அதில் தடைசெய்யப்பட்ட 28 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்துள்ளது. 
பறிமுதல்
அதைத்தொடர்ந்து சுமார் 28 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்ததுடன் அந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் தொண்டி தட்டார் தெருவைச் சேர்ந்த அசாருதீன்(வயது 29) என்பதும், இவர் பெங்களூருவில் இருந்து குறைவான விலைக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வாங்கி வந்து தொண்டியில் உள்ள கடைகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

மேலும் செய்திகள்