குத்துச்சண்டை போட்டி: கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவர் வெள்ளி பதக்கம் வென்று சாதனை
மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவர் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார்.;
கரூர்,
செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கம் சார்பில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில், கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவர் ராஜகுமரன் 46-49 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டு விளையாடி வெற்றி பெற்று, வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதையடுத்து பதக்கம் வென்ற மாணவர் ராஜகுமாரை கரூர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் கவுசல்யா தேவி, உடற்கல்வி இயக்குனர் ராஜேந்திரன், பேராசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.