புஷ்பகிரி புனித மலர்மலை மாதா திருத்தல பெருவிழா
புஷ்பகிரி புனித மலர்மலை மாதா திருத்தல பெருவிழா
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் புஷ்பகிரி புனித மலர்மலை மாதா திருத்தல பெருவிழா கடந்த 22-ந் தேதி தர்மபுரி மறை மாவட்ட முதன்மை குரு அருள்ராஜ் தலைமையில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. 23-ந் தேதி ஜெபமாலை நிகழ்ச்சி மரிய அந்தோணி, அமலநாதன், அந்தோணி ஆகியோர் தலைமையில் நடந்தது. நேற்று முன்தினம் தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில், திருவிழா திருப்பலி நடந்தது. மாலை வேண்டுதல் திருப்பலியும், இரவு மறைவட்ட முதன்மைகுரு ஜார்ஜ் தலைமையில் வேண்டுதல் தேர் மந்தரிப்பு நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து தேர்பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வேண்டுதல் நிறைவேற்றினார்கள்.