தீ விபத்து தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பத்தூர் தீ விபத்து தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-04-25 18:38 GMT
திருப்பத்தூர்,

திருப்பத்தூர் தீயணைப்புத்துறையினர் மற்றும் மீட்பு துறை, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் திருப்பத்தூர் வணிக நிறுவனங்களில் வணிகர்கள், பணியாளர்களிடமும் மற்றும் திருப்பத்தூர் கிருஸ்தவராஜா மெட்ரிக் பள்ளி மாணவ-மாணவியரிடம் தீ விபத்தை தடுக்கும் முறைகள் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பத்தூர் நிலைய அலுவலர் கணேசன் தலைமையில் தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதில் நிலைய எழுத்தர் ராஜா, தீயணைப்பு நிலைய வீரர்கள் சிவக்குமார், திருப்பதி, பிரபு, தாமரைச்செல்வன் ஆகியோர் மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.

மேலும் செய்திகள்