விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிருஷ்ணராயபுரம்,
கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பஞ்சப்பட்டியில் தமிழ்மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர் ஆண்டியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பாலன், மாவட்ட செயலாளர் தங்கவேல், ஒன்றிய தலைவர் மாணிக்கம் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர். 100 நாள் வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்த வேண்டும், 100 நாள் வேலைத்திட்டத்திற்கு ரூ.2.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.