கெடாரிகுப்பம் பள்ளியில் மேலாண்மைக் குழு கூட்டம்
கெடாரிகுப்பம் பள்ளியில் மேலாண்மைக் குழு கூட்டம் நடந்தது.;
அரக்கோணம்
அரக்கோணத்தை அடுத்த கெடாரி குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் முழு மறு கட்டமைப்புக்கான கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழி தலைமை தாங்கினார். அரக்கோணம் வட்டாரக் கல்வி அலுவலர் கராமத்துல்லா பார்வையாளராக கலந்து கொண்டார்.
அவருடைய முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மேலாண்மைக் குழு தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் ஆகியோர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
இக்கூட்டத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.