மாணவ-மாணவிகள் விடுதிகளில் கலெக்டர் திடீர் ஆய்வு
போளூரில் மாணவ-மாணவிகள் விடுதிகளில் கலெக்டர் திடீரென ஆய்வு செய்தார்.;
போளூர்
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் உள்ள ஆதிதிராவிடர் நல மாணவர்கள் விடுதி, ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதி, பிற்படுத்தப்பட்டோர் நலவிடுதி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதி ஆகிய 4 இடங்களில் கலெக்டர் முருகேஷ் நேற்று இரவு 9 மணி அளவில் திடீரென ஆய்வு செய்தார்.
இதில் ஒரு விடுதியில் 55 மாணவர்களுக்கு ஒருவரும் இல்லை. ஆனால் அனைவரும் இருப்பது போல வருகை பதிவு இருந்தது. ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியில் இருக்கும் 60 மாணவிகள் வருகை பதிவு சரியாக இருந்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 102 விடுதிகளில், ஜமுனாமரத்தூர் 2 விடுதிகள் நீங்கலாக 100 விடுதிகளில் அதிகாரிகள் ஒரே நேரத்தில் ஆய்வு செய்து வருவதாக கலெக்டர் முருகேஷ் கூறினார்.