கவுரவ விரிவுரையாளர் வீட்டில் ரூ.2½ லட்சம் நகை-பணம் கொள்ளை

விருத்தாசலம் அருகே கவுரவ விரிவுரையாளர் வீட்டில் ரூ.2½ லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-04-25 17:35 GMT
விருத்தாசலம், 

விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள சிறுவம்பார் காலனியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40). இவர் திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரியில் கவுரவ விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிறுவம்பார் கிராமத்தில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு திண்டிவனத்தில் குடும்பத்துடன் தங்கி உள்ளார். இந்த நிலையில் நேற்று காலையில் சிறுவம்பாா் கிராமத்தில் உள்ள ரமேஷ் வீட்டின் கதவு திறந்த நிலையில் கிடந்தது. இதைபார்த்த பக்கத்து வீட்டை சேர்ந்த அவருடைய அண்ணன் விஜயகுமார் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. 
மேலும் பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகைகள், வெள்ளி நகைகள், ரூ.80 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாதததை நோட்டமிட்ட மா்மநபர்கள் நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2½ லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. 
இதுகுறித்த புகாரின்பேரில் மங்கலம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்