நத்த அள்ளியில் காளியம்மன் கோவில் தேரோட்டம்

நத்த அள்ளியில் காளியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.

Update: 2022-04-25 17:33 GMT
பாப்பாரப்பட்டி:
தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள நத்தஅள்ளி கிராமத்தில் காளியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சாமிக்கு சிறப்பு அலங்காரம், கும்ப பூஜைகள், சாமி வீதி உலா, விநாயகர் தேரோட்டம் நடைபெற்றது. நேற்று முன்தினம் குதிரை வாகனத்தில் அம்மன் வீதி உலா நடந்தது. நேற்று மாலை பெரிய தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். விழாவில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேர்த்திருவிழாவையொட்டி மாட்டு சந்தை நடைபெற்றது.

மேலும் செய்திகள்