திண்டிவனத்தில் தாறுமாறாக ஓடிய ஆட்டோ கார் மீது மோதியது டிரைவருக்கு தர்ம அடி

திண்டிவனத்தில் தாறுமாறாக ஓடிய ஆட்டோ கார் மீது மோதியது. விபத்தை ஏற்படுத்திய டிரைவருக்கு தர்ம அடி கொடுத்தனா்.

Update: 2022-04-25 17:10 GMT

திண்டிவனம்,

திண்டிவனத்தில் செஞ்சி ரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அருகே, நேற்று திண்டிவனம் நோக்கி ஆட்டோ ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, தாறுமாறாக ஓடி சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் மீது மோதியது.


இதில், ஆட்டோவில் பயணம் செய்த 2 பேரும் தவறி கீழே விழுந்து காயமடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


தொடர்ந்து, விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ டிரைவரான பெலாகுப்பம் பகுதியை சேர்ந்த அபிமன்னன் என்பவரை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தர்ம அடி கொடுத்தனர். இதனால் அந்தபகுதியில் பரபரப்பு நிலவியது.

 இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 2 பேரும் அங்கிருந்து மாயமாகிவிட்டனர்.  இந்த விபத்து தொடர்பாக ரோசணை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்