அ.தி.மு.க.செயலாளர் பதவிக்கு ஓ.எஸ். மணியன் உள்பட 2 பேர் மனு தாக்கல்
நாகை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பதவிக்கு ஓ.எஸ். மணியன் உள்பட 2 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
வெளிப்பாளையம்:
நாகை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பதவிக்கு ஓ.எஸ். மணியன் உள்பட 2 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
உள்கட்சி தேர்தல்
அ.தி.மு.க. அமைப்பு ரீதியாக உள்ள நகர, ஒன்றிய, பேரூராட்சி மற்றும் பகுதி நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான உட்கட்சி தேர்தல் கடந்த மார்ச் 27-ந் தேதி மற்றும் ஏப் 11-ந் தேதி ஆகிய 2 நாட்கள் நடந்தது. இதில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் மாவட்ட செயலாளர் பதவிக்காக விருப்ப மனுக்கள் நேற்று பெறப்பட்டது.
வேட்பு மனு தாக்கல்
நாகை மாவட்ட தற்போதைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் தனது ஆதரவாளர்களுடன் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்துக்கு வந்து மாவட்ட செயலாளர் பதவிக்கு போட்டியிட தேர்தல் பொறுப்பாளர் செஞ்சிராமச்சந்திரனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இதேபோல முன்னாள் அமைச்சர் ஜெயபால் தனது ஆதரவாளர்களுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.
----