திண்டிவனம் அருகே தீ விபத்து: தைல மரங்கள் எரிந்து சாம்பல்
திண்டிவனம் அருகே தீ விபத்தில் தைல மரங்கள் எரிந்து சாம்பலானது.;
மயிலம்,
திண்டிவனம் அடுத்த ஜக்காம் பேட்டையில் அஜித் என்பவருக்கு சொந்தமாக 9 ஏக்கரில் தைலமர தோப்பு உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலை மர்மமான முறையில் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென தோப்பின் பெரும் பகுதியில் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. தகவல் அறிந்த மயிலம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் அவர்களால் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இதனால் தோப்பு முழுவதும் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து மயிலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.