கள் தடையை நீக்கக்கோரி பனை ஏறும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கள் தடையை நீக்கக்கோரி பனை ஏறும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.;
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை தமிழ்நாடு கள் இயக்கம், தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் ஆகியன சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கள் தடையை தமிழக அரசு உடனடியாக நீக்க வேண்டும், கள்ளை பாரம்பரிய உணவாக அறிவிக்க வேண்டும், பனையேறிகள் மீது பொய் வழக்கு போடுவதை தவிர்க்க வேண்டும்,
ஏற்கனவே போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். சட்ட ஆலோசகர் அய்யப்பன், வக்கீல் தீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் பாபுகோவிந்தராசு, நாம் தமிழர் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் தமிழேந்தி, ம.தி.மு.க. மாநில தேர்தல் பணிக்குழு துணை செயலாளர் ஜானகிராஜா,
கரிகால சோழன் பசுமை மீட்பு படை அகிலன், யாதும் ஊரே யாவரும் கேளீர் பொது நலச்சங்க தலைவர் நாராயணன், எழுத்தாளர் செங்குட்டுவன், பசுமை இயற்கை விவசாய இயக்க நிர்வாகி பாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் பனை ஏறும் தொழிலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.