திருக்கோவிலூரில் 25 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் ஒன்றியக்குழு தலைவர் வழங்கினார்
திருக்கோவிலூரில் 25 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் ஒன்றியக்குழு தலைவர் வழங்கினார்
திருக்கோவிலூர்
கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நலத்துறைசார்பில் திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கு ஊட்டசத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் அஞ்சலாட்சி அரசகுமார் ஊட்டச்சத்து குறைவாக உள்ள 25 குழந்தைகளுக்கு சத்துணவு பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் திருக்கோவிலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரேச்சல்கலைச்செல்வி, ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, அய்யனார் மற்றும் ஊட்டச்சத்து அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.