விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கீரப்பாளையத்தில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புவனகிரி,
கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விவசாய சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட துணை செயலாளர் காமராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சேகர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் ரகுராம், குமாரி, குமார், சந்திரசேகர், தியாகராஜன், புலவர் சுந்தரமூர்த்தி, பவானி சித்ரா, அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள். இதேபோல் புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஒன்றிய செயலாளர் பூபாலன் தலைமையில் விவசாய சங்கத்தினா் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.