அ.தி.மு.க. நிர்வாகிகள் தேர்தல்
கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.
கடலூர்,
கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் தேர்தல் பாதிரிக்குப்பத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக மாநில அமைப்பு செயலாளர் மைத்ரேயன், வக்கீல் பிரிவு துணை செயலாளர் அசோக்குமார் ஆகியோர் செயல்பட்டனர். தொடர்ந்து மாவட்ட செயலாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மீண்டும் விருப்ப மனு அளித்தார்.
அதேபோல் மாவட்ட அவை தலைவர், மாவட்ட பொருளாளர், இணை செயலாளர், துணை செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கும் நிர்வாகிகள் விருப்ப மனு அளித்தனர். இதில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு எதிராக யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் அவர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கான அறிவிப்பை தலைமை கழகம் வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டது.