விழுப்புரத்திற்கு குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 3½ மணி நேரம் தாமதம்

விழுப்புரத்திற்கு குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 3½ மணி நேரம் தாமதமாக வந்தது.

Update: 2022-04-25 16:42 GMT

விழுப்புரம், 

கேரளா மாநிலம் குருவாயூரில் இருந்து சென்னைக்கு தினமும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று வருகிறது. இந்த ரெயில் விழுப்புரத்திற்கு மாலை 5.30 மணிக்கு வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் குருவாயூரில் இருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது.

 இதனிடையே மதுரை கூடல்நகர் ரெயில் நிலையம் அருகில் மதியம் 1.30 மணியளவில் சரக்கு ரெயில் பெட்டிகள் திடீரென தடம் புரண்டது. இதன் காரணமாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியிலேயே நிறுத்தப்பட்டது.

 பின்னர் தடம்புரண்ட ரெயில் பெட்டிகள் தண்டவாளத்தில் நிலைநிறுத்தப்பட்டு அந்த சரக்கு ரெயில் சென்றதும் குருவாயூர் எக்ஸ்பிரசும் புறப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு நேற்று மாலை 5.30 மணிக்கு வர வேண்டிய குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 3½ மணி நேரம் தாமதமாக இரவு 9 மணிக்கு வந்து சேர்ந்தது.

 அதன் பிறகு அடுத்த 10 நிமிடத்தில் அந்த ரெயில் விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது. ரெயிலின் இந்த காலதாமதம் காரணமாக பயணிகள் மிகவும் அவதியடைந்தனர்.

மேலும் செய்திகள்