கள்ளக்குறிச்சியில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2022-04-25 16:36 GMT
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. மாவட்ட குழு உறுப்பினர் கஜேந்திரன், நிர்வாகக்குழு உறுப்பினர் கலியபெருமாள், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை தமிழகத்தில் முழுமையாக நிறைவேற்ற மத்திய அரசு ரூ.2½ லட்சம் கோடி வழங்க வேண்டும், தினசரி கூலியை ரூ.600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வட்ட செயலாளர்கள் கருணாநிதி, முருகேசன், மாதர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் ரீத்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்