நாமக்கல் பகவதி அம்மன் கோவில் தீமிதி விழா

நாமக்கல் பகவதி அம்மன் கோவில் தீமிதி விழா

Update: 2022-04-25 15:42 GMT
நாமக்கல்:
நாமக்கல் வண்டிக்காரன் தெரு மற்றும் சுண்ணாம்புக்கார தெருவில் உள்ள பகவதியம்மன் கோவில் தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி கடந்த 17-ந் தேதி மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்தனர். 18-ந் தேதி முனியப்பன் வேல் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தினசரி அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் வடிசோறு மற்றும் மாவிளக்கு நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலையில் அலகு குத்தும் நிகழ்ச்சி நடந்தது. மாலையில் தீமிதி விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கைக்குழந்தையுடன் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து இரவில் கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) மஞ்சள் நீர் மற்றும் தேர்வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

மேலும் செய்திகள்