திருமணம் ஆகாத விரக்தியில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை

திருமணம் ஆகாத விரக்தியில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-04-25 15:34 GMT
கிணத்துக்கடவு, 

கிணத்துக்கடவு அருகே உள்ள சொக்கனூர் காளப்பகவுண்டர் தோட்டத்து பகுதியில் வசித்து வருபவர் சரஸ்வதி (வயது 55). இவரது மகன் நவீன்குமார் (32), விவசாயி. இவருக்கு மதுஅருந்தும் பழக்கம் உள்ளது. 

இந்தநிலையில் நவீன்குமார் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தாயிடம் கேட்டு உள்ளார். அதற்கு சரஸ்வதி குடிப்பழக்கம் உள்ள உனக்கு யார் பெண் தருவார்கள் என கூறியதாக தெரிகிறது. இதனால் திருமணம் ஆகாத விரக்தியில்  நவீன்குமார் இருந்தார். 

கடந்த 23-ந் தேதி சொக்கனூர் பகுதி ஆற்றுப்பாலத்துக்கு சென்ற அவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் நவீன்குமாரை மீட்டு மதுக்கரை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
 
பின்னர் மேல்சிகிச்சைக்காக அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு  உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் நவீன்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்