பள்ளி மாணவிகள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும்- செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் பேச்சு

பள்ளி மாணவிகள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் பேசினார்.

Update: 2022-04-25 15:12 GMT
செங்கல்பட்டு மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில், நந்திவரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நான் முதல்வன் எனும் மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் கலந்துக்கொண்டார். மாவட்ட கலெக்டர் மாணவிகளிடம், சிறப்பான எதிர்காலம் அமைய நல்ல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நன்றாக வாசிக்க வேண்டும். தடைகளை தாண்டி சென்று வெற்றியை அடைய தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று பேசினார். 

இந்த நிகழ்ச்சியில், செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா, செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலர் தாமோதரன், முதன்மை கல்வி அலுவலக நேர்முக உதவியாளர் (மேல்நிலை) உதயகுமார், பள்ளி தலைமை ஆசிரியை சாந்தகுமாரி, ஆசிரியர்கள், பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்