மலேரியா ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

மலேரியா ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

Update: 2022-04-25 14:39 GMT
கோத்தகிரி

கோத்தகிரி அருகே உள்ள கன்னேரிமுக்கு அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் நெடுகுளா அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் உலக மலேரியா ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியை அலமேலு தலைமை தாங்கினார். ஊர் பிரமுகர் போஜன் முன்னிலை வகித்தார்.

 சுகாதார ஆய்வாளர் குமாரசாமி கலந்துக்கொண்டு மலேரியா நோய், அதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்தும் விளக்கம் அளித்தார். தொடர்ந்து மலேரியா நோயை முற்றிலுமாக ஒழிக்க அனைவரும் ஒன்றிணைத்து செயல்படுவோம் என்று மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், செவிலியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

மேலும் செய்திகள்