இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு
இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு
நாமக்கல்:
திருச்செங்கோடு அருகே உள்ள செட்டியாம்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் திருச்செங்கோடு தாலுகா புள்ளாகவுண்டம்பட்டி அருகே உள்ள செட்டியாம்பாளையத்தில் வசித்து வருகிறோம். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். எனவே செட்டியாம்பாளையம் கிராமத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தில் எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.