வந்தவாசியில் மர்ம விலங்கு நடமாட்டம்

வந்தவாசியில் மர்ம விலங்கு நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Update: 2022-04-25 13:07 GMT
வந்தவாசி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி-சேத்துப்பட்டு சாலையில் வந்தவாசி ஐந்துகண் பாலம் அருகில் பாபு என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். அவர் அதிகாலையில் வழக்கம் போல் டீக்கடையைத் திறந்துள்ளார். 

அப்போது எதிரே இருந்த பெட்ரோல் பங்கில் இருந்து மர்ம விலங்கு ஒன்று சாலையை கடந்து டீக்கடை அருகில் உள்ள ஒரு தனியார் நிறுவன பஸ்கள் நிறுத்தும் ெஷட்டின் பெரிய இரும்புக்கதவின் மேலே தாவி குதித்து ஓடியது.

மர்மவிலங்கை பார்த்த பாபு, தகவலை ேகள்விப்பட்ட பொதுமக்கள் பீதி அடைந்தனர். அந்த மர்மவிலங்கு, சிறுத்தையை போல் இருப்பதாக கூறினார். 

இதுகுறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனக் காப்பாளர் விஜயகுமார், அந்தப் பகுதியில் பதிவாகியிருந்த மர்ம விலங்கின் கால் தடங்களை செல்போனில் பதிவு செய்தார். 

இதுகுறித்து வனத்துறையினரும், வந்தவாசி தெற்குப் போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்