பெரணமல்லூரில் தார்சாலை, கால்வாய் அமைக்க பேரூராட்சி கூட்டத்தில் முடிவு

பெரணமல்லூரில் தார்சாலை, கால்வாய் அமைக்க பேரூராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Update: 2022-04-25 12:59 GMT
சேத்துப்பட்டு

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் பேரூராட்சி  கூட்டம் பேரூராட்சி தலைவர் வேணி ஏழுமலை தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் தமிழரசி முன்னிலை வகித்தார். இளநிலை உதவியாளர் மகேந்திரன் வரவேற்று திட்ட அறிக்கை வாசித்தார்.

கூட்டத்தில் 10-வது வார்டு பூத்தங்குட்டை வீதியில் புதிய தார் சாலை அமைப்பது, 11-வது வார்டு முத்து நகரில் பாராளு மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.3 லட்சம் செலவில் கழிவுநீர் கால்வாய் அமைப்பது.

வார்டு கவுன்சிலர்கள் கூறிய பகுதியில் மின்சார பல்புகள் அமைப்பது, குடி தண்ணீர் தேவையை அறிந்து அந்த பகுதியில் குடிநீர் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட பணிகள் செய்ய முடிவு செய்யப்பட்டது. முடிவில் வார்டு கவுன்சிலர் சண்முகம் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்