ரூ.5 லட்சம் மதிப்புள்ள கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் பறிமுதல் 2 பெண்கள் கைது

நாட்டறம்பள்ளி அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-04-25 12:42 GMT
ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளி அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

ரகசிய தகவல்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த ஆத்தூர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 45), இவரது மனைவி சுகுணா (40). இவர்கள் நாட்டறம்பள்ளி பகுதியில் சிக்கன் கடை நடத்தி வருகின்றனர். மேலும் நாட்டறம்பள்ளி அருகே வேட்டப்பட்டு பகுதியில் வசிக்கும் மூர்த்தி (57), இவரது மனைவி சாந்தா (52) இவர்களும் நாட்டறம்பள்ளி பகுதியில் ஓட்டல் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் சுகுணா மற்றும் சாந்தா ஆகிய இருவரும் வெளிமாநில மது பாக்கெட்டுகளை விற்பனை செய்துவருவதாக ஆத்தூர்குப்பம் பகுதி பொதுமக்கள் மூலமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.  தகவலின் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் நாட்டறம்பள்ளி இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் ஆகியோர் தலைமையில் போலீசார் அங்கு சென்றனர்.

மது பாக்கெட்டுகள் பறிமுதல்

சுகுணாவிற்கு சொந்தமான சிக்கன் கடையில் ஆய்வு செய்த போது அட்டைபெட்டிகளில் மதுபாக்கெட்டு்கள் இருந்தது. அதைத்தொடர்ந்து அவர்களுடைய வீட்டிற்கு சென்று சோதனை செய்த போது 92 அட்டை பெட்டிகளில் தலா 90 மில்லி கொள்ளளவு கொண்ட 96 பாக்கெட்டுகள் இருந்து. இதனை போலீசார் கைப்பற்றினர்.

மேலும் சாந்தா நடத்தும் ஓட்டலுக்கு சென்று சோதனை செய்ததில் 105 மது பாக்கெட்டுகள் இருந்தது. அதையும் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட அனைத்தும் கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் என்றும், இதன் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

2 பெண்கள் கைது

பின்னர் சுகுணா மற்றும் சாந்தா ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்து நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மது பாக்கெட்டுகள் திருப்பத்தூர் மது விலக்கு பிரிவு போலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 2 பெண்கள் மீது நாட்டறம்பள்ளி போலிசார் வழக்குப் பதிவு செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்