சூறாவளி காற்றுடன் மழை; வாழை மரங்கள் சேதம்

சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் வாழை மரங்கள் சேதமடைந்தன.

Update: 2022-04-24 22:44 GMT
துறையூர்:
திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக நேற்று முன்தினம் இரவு திடீரென்று சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. அப்போது சூறாவளி காற்றின் காரணமாக துறையூரை அடுத்த காளிப்பட்டியில் சுமார் 600-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சேதமடைந்த வாழை மரங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்