காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை

காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-04-24 22:44 GMT
திருச்சி:
திருச்சி தில்லைநகர் 7-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் லோகநாதன்(வயது 42). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. மேலும் இவர் பல்வேறு இடங்களில் கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியாமல் இருந்துள்ளார். இவற்றால் நீண்ட நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் ேலாகநாதன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்