முசிறி:
முசிறியில் தா.பேட்டை ரவுண்டானா அருகில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக முசிறி போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில், போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் மது விற்ற முசிறி சந்தபாளையத்தை சேர்ந்த முத்துசாமி(வயது 46), எம்.புதுப்பட்டி காலனியை சேர்ந்த பெத்தன் மகன் செந்தில்குமார் ஆகியோரை பிடித்து, அவர்களிடம் இருந்து 152 மது பாட்டில்கள், 2,510 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் அதே பகுதியில் மேல வடுகபட்டியை சேர்ந்த தனபால்(43), உமையாள்புரத்தை சேர்ந்த குமார்(39), வேளகாநத்தம் பகுதியை சேர்ந்த முத்துவேல்(44) ஆகியோரிடம் இருந்து 182 மதுபாட்டில்களும், 17,310 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 5 பேரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.