வள்ளியூரில் பரிதாபம் வாகனம் மோதி போலீஸ்காரர் பலி

வள்ளியூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தார்

Update: 2022-04-24 21:57 GMT
வள்ளியூர்:
வள்ளியூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தார்.
போலீஸ்காரர்
நெல்லை மாவட்டம் வள்ளியூர் மின்வாரிய குடியிருப்பு மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் ெசந்தில் முருகன் (வயது 54). இவர் ராணுவத்தில் பணிபுரிந்துவிட்டு, போலீஸ் வேலை பார்த்து வந்தார். தற்போது, செந்தில் முருகன் சீதபற்பநல்லூர் போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு 7.30 மணியளவில் வள்ளியூர் நான்கு வழிச்சாலையில் செந்தில் முருகன் நடந்து சென்று கொண்டிருந்தார்.
வாகனம் மோதி பலி
அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் செந்தில் முருகன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். 
இதுகுறித்து வள்ளியூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, படுகாயம் அடைந்த செந்தில் முருகனை மீட்டு சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே செந்தில் முருகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பரிதாபம்
இந்த சம்பவம் குறித்து வள்ளியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். 
விபத்தில் இறந்த செந்தில் முருகனுக்கு மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். வள்ளியூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி போலீஸ்காரர் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்