அந்தியூர் அருகே தூக்குப்போட்டு ஆசிரியை தற்கொலை

அந்தியூர் அருகே தூக்குப்போட்டு ஆசிரியை தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-04-24 20:42 GMT
அந்தியூர்
அந்தியூர் அருகே தூக்குப்போட்டு ஆசிரியை தற்கொலை செய்து கொண்டார்.
ஆசிரியை
அந்தியூர் அருகே உள்ள குப்பாண்டபாளையம் கரட்டூர் மேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் கோவையில் ஆயுதப்படை பிரிவு போலீசாக பணியாற்றி வருகிறார். அவருடைய மனைவி சத்யா (வயது 31). இவர் கடத்தூர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
சத்யா கணவருடன் நம்பியூர் அருகே உள்ள எலத்தூரில் குடியிருந்து வந்தார். இவர்களுக்கு 3½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சத்யா மீண்டும் கர்ப்பம் ஆனார். ஆனால் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கரு கலைந்தது. இதனால் சத்யா மனமுடைந்து காணப்பட்டு வந்தார். பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை எடுத்து குப்பாண்டபாளையம் கரட்டூரில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கியிருந்தார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்த நிலையில் நேற்று காலை குளியலறைக்கு சென்ற சத்யா நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதனால் உறவினர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது சத்யா அறையின் விட்டத்தில் சேலையில் தூக்குப்போட்டு் தொங்கி கொண்டிருந்தார்.
உடனே கதவை உடைத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு் சத்யா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் சத்யாவுக்கு திருமணம் நடந்து 4½ ஆண்டுகளே ஆவதால் கோபி ஆர்.டி.ஓ. பழனிதேவியும் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்