திம்பம் மலைப்பாதையில் மரத்தின் மீது ஒய்யாரமாக படுத்திருந்த சிறுத்தை; வாகன ஓட்டிகள் பீதி

திம்பம் மலைப்பாதையில் மரத்தின் மீது படுத்திருந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர்.

Update: 2022-04-24 20:31 GMT
தாளவாடி
திம்பம் மலைப்பாதையில் மரத்தின் மீது படுத்திருந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர். 
10 வனச்சரகங்கள்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், கேர்மாளம் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, கரடி, மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. 
தற்போது சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனால் வனப்பகுதியைெயாட்டி கிராம பகுதிகளில் புகுந்து ஆடு, மாடு, நாய்கள் போன்றவற்றை சிறுத்தை அடித்து கொன்று வருகிறது.
ஒய்யாரமாக படுத்திருந்த சிறுத்தை
குறிப்பாக சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக தமிழக- கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய மலைப்பாதையான திம்பம் மலைப்பாதை உள்ளது. இந்த திம்பம் மலைப்பாதையை அவ்வப்போது வனவிலங்குகள் கடந்து செல்வது வழக்கம். 
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திம்பம் மலைப்பாதை வழியாக கர்நாடகாவில் இருந்து கோவை நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. திம்பம் மலைப்பாதையின் 17-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது ரோட்டோரமாக இருந்த மரத்தின் கிளை மீது சிறுத்தை ஒன்று படுத்திருந்ததை கண்டதும் பஸ் டிரைவர் திடுக்கிட்டார். 
பீதி
எனினும் சுதாரித்துக்கொண்டு பஸ்சை நிறுத்தாமல் அங்கிருந்து மெதுவாக இயக்கி சென்றார். சிறுத்தையை கண்டதும் பஸ்சில் இருந்த பயணிகள் தங்களுடைய ெசல்போன் மூலம் அதை புகைப்படம் எடுத்தனர். பின்னர் சிறிது நேரத்தில் சிறுத்தையானது மரத்தின் கிளையில் இருந்து தாவிக்குதித்து வனப்பகுதிக்குள் சென்றது. மேலும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் சிறுத்தையை கண்டு பீதி அடைந்தனர். 
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘வனவிலங்குகள் அடிக்கடி திம்பம் மலைப்பாதையில் நடமாடுகிறது. எனவே வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனங்களை மிகவும் எச்சரிக்கையுடன், மெதுவாக இயக்க வேண்டும்,’ என்றனர். 

மேலும் செய்திகள்