அரசு பஸ் கண்டக்டர் தற்கொலை

ராமநாதபுரத்தில் அரசு பஸ் கண்டக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-04-24 19:37 GMT
ராமநாதபுரம், 

ராமநாதபுரம் ஓம்சக்தி நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 56). இவர் ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக நகர் டெப்போவில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். அடிக்கடி மது குடித்து விட்டு வந்ததால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மது குடிப்பதை மனைவி தீபா கண்டித்துள்ளார். இதனால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்குள் படுக்க சென்றார். காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டின் ஒரு அறையில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி தீபா அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

மேலும் செய்திகள்