மது கடத்தலில் ஈடுபட்டவருக்கு சாதகமாக செயல்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி உத்தரவு
தஞ்சை அருகே மதுபான கடத்தலில் ஈடுபட்டவருக்கு சாதகமாக செயல்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானமுருகனை தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
தஞ்சாவூர்:-
தஞ்சை அருகே மதுபான கடத்தலில் ஈடுபட்டவருக்கு சாதகமாக செயல்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானமுருகனை தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
மதுபானம் கடத்தல்
தஞ்சை மாவட்டம், திருவையாறு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சமீபத்தில் அரசு மதுபானத்தை அனுமதியின்றி இரு சக்கர வாகனத்தில் கடத்தி வந்த பெரமூர் கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் மணிமுடி என்பவர் மீது திருவையாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானமுருகன் வழக்குப்பதிவு செய்தார்.
ஆனால் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனம் தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்தார்.
பணியிடை நீக்கம்
அதன்பேரில் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் மதுபானம் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் கடத்தலில் ஈடுபட்ட மணிமுடிக்கு சாதகமாக சப்-இன்ஸ்பெக்டர் ஞானமுருகன் செயல்பட்டது தெரிய வந்தது.
இந்த விசாரணையின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ஞானமுருகனை தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி நேற்று பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.