150 கர்ப்பிணிகளுக்கு வளைக்காப்பு
கமுதி அருகே பேரையூரில் 150 கர்ப்பிணிகளுக்கு வளைக்காப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கமுதி,
கமுதி அருகே பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. சுகாதாரப்பணிகள் பரமக்குடி துணை இயக்குனர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். இதில், ஊராட்சி மன்ற தலைவர் ரூபி, ஒன்றிய கவுன்சிலர் அன்பரசு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். முகாமில் 1,258 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது..மேலும் 300 கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. 150 கர்ப்பிணிகளுக்கு வளைக்காப்பு நடத்தப்பட்டது.பின்னர் பல்வேறு துறை சார்பில் கண்காட்சி நடைபெற்றது. முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அசோக் செய்திருந்தார்.