பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் வழங்கிட கோரிக்கை

கலந்தாய்வு மூலம் பணியிடங்களுக்கு சென்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் வழங்கிட கோரிக்கை விடுக்கப்பட்டது.;

Update: 2022-04-24 19:13 GMT
பெரம்பலூர், 
தமிழ்நாடு பட்டதாரி-முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவர் மகேந்திரன், பொதுச் செயலாளர் சுந்தரமூர்த்தி, பொருளாளர் துரைராஜ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த மாதம் 14-ந்தேதி பள்ளி கல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடைபெற்ற பணி நிரவல் கலந்தாய்வு மூலமாக தேவை பணியிடங்களுக்கு சென்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு 30 நாட்களை கடந்தும் மாத ஊதியம் இதுநாள் வரை பெற்று வழங்கிடாத நிலையில் நிர்வாகத்தை தொடர்ந்து நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் மற்றும் கடிதம் வாயிலாகவும் வலியுறுத்தி வருகிறோம். இருப்பினும்  ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை (IFHRMS) என்ற செயலியின் மூலமாக மாத ஊதியம் பெறுவதற்கு பணியிடங்களை தோற்றுவித்த அரசாணைகள் அனைத்தையும், அச்செயலியில் பதிவேற்றம் செய்தால் மட்டுமே சாத்தியம் என்கின்றனர். மேற்கண்டவாறு பதிவேற்றம் செய்திடுவதில் உள்ள இடர்பாட்டை விரைந்து களைந்து, இந்த மாத ஊதியமும் பெற இயலாத பட்சத்தில் 2 மாதமாக ஊதியமின்றி தங்களுக்கான தேவைகளை நிறைவேற்ற இயலாது தடுமாற்றத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் பெற்றிட வழிவகை செய்திடுமாறு வேண்டுகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்