பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்
விருத்தாசலம் மற்றும் பெண்ணாடத்தில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது.;
விருத்தாசலம்,
விருத்தாசலம் பூதாமூர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமையாசிரியை மீனாம்பிகை தலைமை தாங்கினார். நகரமன்ற உறுப்பினர் அருள்மணி, முன்னாள் தலைமையாசிரியர் ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பள்ளி ஆசிரியை அனுசுயா வரவேற்றார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் அன்பழகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்துதல், இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளி வளர்ச்சி திட்டங்கள் குறித்து கருத்து கேட்கப்பட்டது. இதில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள் வாசுகி, பால் சேவியர், சுசிலா, விஜயதரணி, ஜான்பால் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை கலாவதி நன்றி கூறினார்.
பெண்ணாடம்
இதேபோல் பெண்ணாடம் பேரூராட்சிக்கு உட்பட்ட சோழன்நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாணவர்களின் பெற்றோர் கலந்து கொண்டு பள்ளியில் இடப்பற்றாக்குறை காரணமாக மாணவர்கள் வகுப்பறைகளில் அமர்ந்து படிக்க முடியாமல் அவதி அடைந்து வருகிறார்கள். இதனால் பள்ளியை விரிவுபடுத்தி புதிய கட்டிடம் கட்டி மாணவ-மாணவிகளின் கல்விக்கனவை அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் சுகந்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழழகன், பெண்ணாடம் பேரூராட்சி துணைத் தலைவர் குமரவேல் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.