பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, பசும்பலூரை சோ்ந்தவர் பாக்யராஜ் (வயது 29). லாரி டிரைவரான இவர் நேற்று முன்தினம் வி.களத்தூருக்கு சென்று விட்டு மீண்டும் பசும்பலூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பசும்பலூரில் இருந்து வி.களத்தூருக்கு சென்ற ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பாக்யராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.