உயிரிழந்த போலீஸ் ஏட்டுக்கு சக போலீசார் நிதியுதவி

உயிரிழந்த போலீஸ் ஏட்டுக்கு சக போலீசார் நிதியுதவி அளித்தனர்.

Update: 2022-04-24 18:44 GMT
பெரம்பலூர், 
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 40). இவர் மாவட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்த போது, உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ந்தேதி இறந்து விட்டார். இந்தநிலையில் அவருடன் தமிழகம் முழுவதும் 2003-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்த போலீசார் ஒன்றிணைந்து தமிழ்ச்செல்வன் குடும்பத்திற்கு உதவி செய்ய முன்வந்தனர். அதன்படி உதவும் கரங்கள் நண்பர்கள் 2003-ம் பேட்ச் சார்பாக ரூ.26 லட்சத்து 19 ஆயிரத்து 975 தொகை கட்டியதற்கான காப்பீடு பிரிமியம் பத்திரங்கள் மற்றும் ரூ.1 லட்சத்து 58 ஆயிரத்து 25 வங்கி சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்பட்டதற்கான ஆவணம், ரூ.9 ஆயிரத்து 647 தனியார் மருத்துவ காப்பீடு கட்டியதற்கான பத்திரம், மீதமுள்ள காப்பீடு கமிஷன் தொகையான ரூ.36 ஆயிரத்து 464-க்கான காசோலையினை பெரம்பலூர் நான்கு ரோடு சண்முகா நகரில் வசிக்கும் தமிழ்ச்செல்வனின் மனைவி அகிலா மற்றும் அவர்களது 2 மகன்களுடன் பெரம்பலூா் மாவட்ட உதவும் கரங்கள் நண்பர்கள் ஒப்படைத்தனர். இதில் 2003-பேட்ச் போலீசார் கலந்து கொண்டார்கள்.

மேலும் செய்திகள்