பள்ளி பஸ் மோதி தொழிலாளி பலி

தனியார் பள்ளி பஸ் மோதி கூலித்தொழிலாளி பலியானா்.

Update: 2022-04-24 18:43 GMT
கீழப்பழுவூர், 
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட புத்தூர் காலனி தெருவை சேர்ந்தவர் கடல்மணி (வயது 35), கூலித்தொழிலாளி. இவர் தனது மகன் ரோகிந்த்துடன் (3) பொய்யூர் கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு திரும்பி வந்து கொண்டு இருந்தார். அப்போது கீழப்பழுவூரை சேர்ந்த தனியார் பள்ளி பஸ் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கடல்மணி மற்றும் அவரது மகன் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவர்கள் 2 பேரையும் மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடல்மணி பரிதாபமாக இறந்தார். அவரது மகன் ரோகிந்திற்கு கால்முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த விபத்து குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்